தல 61 படத்தின் இசையமைப்பாளர் இவரா.? யுவன் ஷங்கர் ராஜா கிடையாதாம்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 61ஆவது திரைப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அஜீத்தோ அடுத்த படத்தில் இணைவது குறித்து எந்த ஒரு செய்தியையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் மேலும் இந்தியாவை சுற்றி வலம் வந்தார். அதன் பிறகு தனது குடும்பத்துடன் தற்போது சூப்பராக பொழுதை கழித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தகவல்கள் மட்டும் பல்வேறு விதமாக வெளிவருகின்றன.

ஆம் அஜித்தின் 61 படத்தை யார் இயக்க போவது யார் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் கூறுகின்றன. அஜித்தின் பிரதான இயக்குனரான சிறுத்தை சிவாவுடன் மீண்டும் அஜித் இணைய உள்ளதாக தகவல்கள் ஒரு பக்கம் வெளிவருகின்றன ஆனால் உண்மையில் அவருடன் பணியாற்ற போவதில்லை.

என்ற தகவல் உறுதியாக கூறப்படுகிறதே காரணம் அஜித் ஹச். வினோத் இடையே செம்ம கெமிஸ்ட்ரி உள்ளதால் இருவரும் மீண்டும் ஒரு முறை கை கோர்க்கிறார். அஜித் வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் உடன் கைகோர்க்கிறார் மேலும் தயாரிப்பாளர் போனி கபூரும் இந்த படத்தில் இணைகிறார் இதனால் வலிமை படத்தில் பணியாற்றிய அதே குழு இருக்குமென தெரியவந்துள்ளது.

ஆனால் ஒரே ஒரு சின்ன மாறுதல் மற்றும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதாவது வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த பட்சத்தில் அடுத்த படத்தில் அனிருத் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Exit mobile version