சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் கன்டஸ்டன்ட் ஆக கலந்துகொண்ட நாஞ்சில் விஜயன் அவர் காமெடியில் வில்லாதி வில்லனாக மக்கள் மனதில் ஒரு அங்கீகாரத்தை பிடித்தவர் தான் நம்ம நாஞ்சில் விஜயன். அவர் செய்து வந்த காமெடிக்கு மக்கள் ஆதரவுகளை தந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டும்தான் ரசிகர்கள் என்று இல்லாமல் இதற்கு நிகராக சின்னத்திரையிலும் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் குவிந்தன. அந்தவகையில் ஒரு தனி மனிதனின் திறமைக்கு வாய்ப்பு கொடுப்பதில் விஜய் டிவி தனித்துவம் பெற்றது. பலர் சாதாரண மக்களாக இருந்தாலும் அவர்களின் திறமையை மட்டுமே நிகழ்ச்சியில் கொண்டு வந்து பிரபலமாக இருக்கின்றனர்.
அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.இதனைத்தொடர்ந்து, ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ ‘சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடி, லேடி கெட்டப்பில் செய்து வரும் செயல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.இவரும் ராமரும் சேர்ந்து செய்து வந்த “சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை” என்ற எபிசோடு யூட்யூபில் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள். இதில் விஜய் டிவியில் நடித்து வந்த பல நடிகர்கள் கார் வாங்கும் செய்தி வெளியானது.
அந்தவகையில் நாஞ்சில் விஜயன் புதிதாக கார் ஒன்று வாங்கி இருக்கிறார். இதை குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை கடந்த நாஞ்சில் விஜயன் இப்படி ஒரு நல்ல நிலைமை அடைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரிதும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்துப் பல கனவுகளுடன் ரயிலில் ஏறி உட்கார இடம் கிடைக்காமல் அவ்வளவு துன்பத்தை அடைந்த நாஞ்சில் விஜயனுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.விஜய் டிவி இப்படி ஒரு நிகழ்வு என் வாழ்வில் நடக்கும் என்று நான் எதிர் பார்த்தது கிடையாது அதுக்கு எல்லாம் காரணம் விஜய் டிவி தான் என்று பதிவின் மூலம் வெளிப்படுத்துகிறார். மேலும் நாஞ்சில் விஜயன் வெற்றியடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.