ஹிந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன் திரைப்படத்தில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை இவரா!! வைரலாகும் புகைப்படம்.

0

சிறிய பட்ஜெட்டில் எடுத்த ஒரு சில திரைப்படங்கள் வெளிவந்த யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பல கோடி வசூல் சாதனை படைத்த சில திரைப்படங்கள் உள்ளது. அந்தவகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ராட்சசன்.

இத்திரைப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார். இதைதொடர்ந்து இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.  சைக்கோ த்ரில்லர் நிறைந்த இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரிஸ்டோபர் கதாபாத்திரம் தற்போது உள்ள பிரபல வில்லன்கள் அனைவரையும் அலற விட்டது.

இத்திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை எதிர்பார்ப்புகளுடன் மிகவும் திரில்லாக அமைந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எனவே யூடியூப் வாசிகள் இத்திரைப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வந்தார்கள்.

எனவே தற்போது இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. எனவே தெலுங்கு ரீமேக்கில் இத்திரைப்படத்தினை ரஞ்சித் திவாரி இயக்க விஷ்ணு விஷால் நடித்து இருந்த கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார். இவர்களைத் தொடர்ந்து அமலாபால் கதாபாத்திரத்தில் ரகுல் பிரதீப் சிங் நடிக்க உள்ளார்.

ரஞ்சித் திவாரி மற்றும் அக்சய்குமார் இவர்களின் கூட்டணியில் தெலுங்கில் இதற்கு முன்பே ஒரு திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்களின் கூட்டணியில் ராட்சசன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாக உள்ளது.

rakul
rakul

இதனைத் தொடர்ந்து ரகுல் பிரீத் சிங் நடிகர் கமலஹாசன் ஒன்றிணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.