ராஷ்மிகா மந்தனாவுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான்.? கிரிக்கெட்டில் அவர் என்ன பண்ணுவார் என்பதை நல்லா புரிஞ்சி வச்சி இருக்காரு..

கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

இது ஒருபுறம் இருக்க தற்போது தமிழிலும் காலடி வைத்து தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சிக்கிறார். அதற்கு காரணமும் அண்மையில் சுல்தான் இதுதான் படத்தின் பொழுது எனக்கு தமிழ் நாட்டின் கலாச்சாரம் பிடித்துள்ளது மேலும் தமிழ்நாட்டு சாப்பாடுகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது விரைவில் தமிழ்நாட்டு மருமகளாக வருவேன் என கூறினார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் அடிக்க தற்பொழுது ரெடியாக இருக்கிறார் என இதை வைத்து பார்க்கும் புரிகிறது. இன்ஸ்டா பக்கத்தில் பெருமளவு ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டா தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் கிரிக்கெட் பார்ப்பது உண்டு அந்த வகையில் ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் ஒரு அணியாக இருக்கும் பெங்களூரு அணிக்கு ஆதரவு கொடுத்து வந்தார் இவர் அதிலும் குறிப்பாக விராட் கோலி தனக்கு பிடிக்குமென சமீபத்தில் சொன்னார் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் அதை உறுதி செய்ய உங்களின் ஃபேவரட் கிரிக்கெட் யார் என ரசிகர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா எனக்கு பிடித்த கிரிக்கெட்டர் மகேந்திரசிங் தோனி என உடனடியாக சொன்னார் இதை கேட்டு ஷாக்கனார். மேலும் இது குறித்து பேசிய அவர் பேட்டிங், கேப்டன்சி மற்றும் பவுலர்களை சரியான நேரத்தில் இறக்குவது போன்றவை தோனியிடம் இருந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறினார்.

Leave a Comment