பாரதிகண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு பதிலாக நடிக்கப் போவது யாரடி நீ மோகினி சீரியல் பிரபலம் கிடையாது.? இவர்தான் வெளிவந்த தகவல்.

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.  சினிமா  உலகில் இருக்கும் எல்லோருக்கும் பொதுவான ஆசையாகத்தான் இதுவும் பார்க்கப்படுகிறது. அந்த காரணத்தினாலேயே தற்போது சின்னத்திரை தொடர்களில் பல நாயகிகளும் நடிகர்களும் மாற்றப்படுகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாரதிகண்ணம்மா.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து தற்போது ரோஷினி விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்து வந்த நட்சத்திரம் தான் கண்ணம்மாவாக அந்த சீரியலில் நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் கசிந்தன.ஆனால் தற்போது அவர் அந்த சீரியலில் நடிக்க வில்லையாம்.சீரியல் குழு தற்போது வேறு ஒரு பிரபலத்தை தட்டி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் வேறு யாருமல்ல டிக் டாக் மற்றும் மாடல் என பலவற்றிலும் தனது திறமையை காட்டி வரும் வினுஷா தேவி  .தற்பொழுது பாரதிகண்ணம்மா சீரியலில் ரோஷினி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.இவர் கிட்டத்தட்ட உறுதி என ஒரு தரப்பு சைடிலிருந்து கூறப்படுகிறது.

vinusha
vinusha

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை மேலும் அச்சு அசல் பார்ப்பதற்கு கண்ணம்மா போலவே இருந்தாலும் அவரது திறமை இவரிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான்  என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளை பார்த்து  திறமையை எடை போட முடியாது ஆனால் சீரியலில் நடிக்க நடிகை இவர் அவரையே ஓவர்டேக் செய்யலாம் என்பதும் ஒரு பக்கத்தின் கருத்தாகவே இருந்து வருகிறது.

Leave a Comment