விஷாலின் 31 வது திரைபடத்தை எடுக்க போவது இவரா.? இந்த துக்கடா பையனை நம்பி களம் இறங்குறாரே..ஜெயிப்பாரா

நடிகர் விஷால் நடிகராகவும் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார் தற்போது படங்களை தயாரிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் துப்பறிவாளன் 2 படத்தை இவர் எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் “எனிமி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இருப்பினும் சமீபகாலமாக திரையில் வந்த விஷாலின் திரைப்படங்கள் சொல்லும்படி வெற்றியை பெறாததால் அவர் எனிமி படத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்தப்படத்தின் கதையின் வில்லனாக நடிகர் தனது நண்பருமான ஆர்யாவை கமிட் பண்ணி உள்ளார் நடிகர் விஷால். இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில் எனிமி படம் மிகப்பெரிய அளவில் வந்து இருப்பதாகவும் அது குறித்து ஆர்யா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு விஷாலுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெறும் என அவர் கூறினார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் தனது 31வது திரைப்படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து உள்ளார் அந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் து .ப. சரவணன் என்பவர் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு குள்ளநரி கூட்டம் படத்தை இயக்கிய பாலாஜி என்பவருக்கு உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது விஷால் தேர்வு செய்துள்ளார் இந்த படத்திற்கான நடிகர்களை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது.