அஜித் குமார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய படத்தை தொடர்ந்து அண்மையில் அஜித்தின் வலிமை படமும் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வைத்தது.
மேலும் வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போ பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்கில் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் வெளி வரவே அதிக அவகாசம் எடுத்துக் கொண்டதால் ரசிகர்கள் செம அப்செட் ஆகினர்.
என்பதை உணர்ந்து கொண்ட அஜித் இந்த வருடத்தில் இன்னொரு படத்தை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தும் முனைப்பு காட்டி உள்ளார் அஜித். அந்த வகையில் மீண்டும் ஹச். வினோத்துடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இதற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க உள்ளார். இதுவே அஜித் ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்துள்ளது இந்த நிலையில் இன்னொரு சிறப்பான செய்தி கிடைத்து. உள்ளது அதாவது அஜித்தின் 62 வது திரைப்படத்தை சுதா கொங்கரா அல்லது விஷ்ணுவர்தன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்து உள்ளது.
அதாவது நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது இது கிட்டத்திட்ட உறுதியான தகவல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.