தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளார் எப்பொழுதும் அடுத்த படத்தின் இயக்குனரை உடனடியாக சொல்லவே மாட்டார் ஆனால் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்தடுத்த இயக்குனருடன் இனைய போவதை உறுதி படித்துவிட்டு உள்ளார் அந்த வகையில் விஜய்யின் 66 வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்கியிருக்கிறார் மேலும் தில் ராஜு என்பவர் பொருட் செலவில் இந்த படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. படமே எடுக்க வில்லை.
அதற்குள் இந்த படத்தை பற்றி சில தகவல்களை அவ்வப்போது படக்குழு கொடுத்துக் கொண்டுதான் வருகிறது இது இப்படி இருக்க மறுபக்கம் பீஸ்ட் படத்தில் இருந்தும் தகவல்கள் கசிவதால் விஜயை பற்றிய பேச்சுக்களே சமூக வலைதளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 75% முடிவடைந்தது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவிலேயே ஆரம்பிக்க இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் 66 படத்தின் படக்குழுவும் ரெடியாக இருக்கிறது விஜய் வந்தால் உடனடியாக அவரை வைத்து படத்தை எடுக்க வேண்டும் என்பதே அவரது ஆர்வம் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் 66 படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. சமீபத்தில் தளபதி ரசிகர்கள் டாப் இசையமைப்பாளர்களுக்கு மெசேஜ் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் தமனுக்கு விஜய் ரசிகர்கள் மெசேஜ் பண்ணி நீங்கள் தான் விஜய் 66 படத்தில் பணியாற்றப் போகிறார் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் fingers cross என பதிவிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்பதே கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது எனக் கூறி தற்பொழுது இச்செய்தியை கொண்டாடி வருகின்றனர்.
