ஷங்கர், ராம்சரண் இணையும் படத்தில் ஹீரோயின்னாக நடிக்க போவது இவரா.? கேட்ட சம்பளம் தான்.. பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

shankar and ramcharan
shankar and ramcharan

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளவர் இயக்குனர் ஷங்கர் ஆரம்பத்திலிருந்தே தற்போது வரையிலும் மிகப் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து வெற்றி கொண்டுள்ளதால் தொடமுடியாத உச்சத்தை கண்டுள்ளார் மேலும் இந்திய சினிமாவில் கவனிக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தமிழில் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படம் கிடப்பில் கிடப்பதால் இயக்குனர் ஷங்கர் தமிழையும் தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கங்களில் அடியெடுத்து வைத்துள்ளார் ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து அந்நியன் படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார் மேலும் தெலுங்கில் டாப் நடிகரான ராம்சரணை வைத்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை எடுக்கவிருக்கிறார்.

விரைவிலேயே இந்த கூட்டணியில் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தின் பூஜை அண்மையில் கூட தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பட்ஜெட் பிரம்மாண்டம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது ஏனென்றால் வித்தியாசமான திரைப்படங்களை இயக்குவதில் சங்கருக்கு பிடிக்கும்.

மேலும் ராம் சரணுக்கு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என கூறப்படுகிறது. மேலும் கதைக்கு ஏற்ற நடிகைகளை தற்போது தேர்வு செய்து வருவதாக தகவல்கள் எழுந்துள்ளன அந்த வகையில் பாலிவுட் பிரபல நடிகையான கியாரா அத்வானி கமிட்டாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் படத்தில் நடிப்பதற்காக நடிகை கியாரா அத்வானி கேட்ட சம்பளம் தான் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது படத்தின் கதைப்படி இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை கேட்ட சம்பளம் 5 கோடி என கூறப்படுகிறது இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.