ஃபாஃப் டூ பிளெஸ்ஸிக்கு மிகவும் பிடித்த CSK வீரர் யார் தெரியுமா.? தல தோனி கிடையாது.

இந்தியாவில் சமீப காலமாக ஐபிஎல் வருடம் வருடமாக  நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15வது சீசன் வருகின்ற மார்ச் மாதத்தில் துவங்க இருக்கிறது. இதுவரை 8 அணிகள் விளையாட வந்த நிலையில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 12 ,13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மெகா ஏலம் நடத்தப்பட்டது. இதில் ஒரு சில முக்கிய வீரர்கள் தனது பழைய அணியில் இருந்து புதிய அணிக்கு மாறி உள்ளனர். இதனால் போட்டியை பார்க்க ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர் எப்படி விளையாட போகிறார்கள் என்பதை பார்க்க..

சென்னை அணி கடந்த முறை கோப்பையை வென்று நடப்புச் சாம்பியன் ஆக இருந்தாலும் இப்பொழுது பல வீரர்களை வாங்கியுள்ளது அதேசமயம் சில முக்கிய வீரர்களை வெளியே விட்டும் உள்ளது. இந்த வகையில் ஷர்துல் தாகூர், ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் போன்ற நட்சத்திர வீரர்களை வெளியிட்டது சிஎஸ்கே அணிக்கு பாதகமாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது அவர்கள் எப்படி செயல்படுகிறார் என்பதை பொருத்தே சிஎஸ்கே அணியின் நிலைமை மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் சிஎஸ்கே அணியில் எனக்கு பிடித்த வீரர் யார் என்பது குறித்து பேசியுள்ளார் அதில் அவர் கூறுகையில் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்க்கு நான் அண்ணன் மாதிரி அவர் மிகவும் ஒரு திறமை வாய்ந்த இளம் வீரர் நிச்சயம்.

இந்திய அணியில் அவருக்கு மிகப்பெரிய ஒரு எதிர்காலம் உள்ளது அவருடன் நான் துவக்க வீரராக இம்முறை விளையாட முடியாது அவரை நான் ரொம்ப இந்த தொடரில் மிஸ் செய்கிறேன் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு கதவு எனக்கு சிஎஸ்கே வழியாக மூடினாலும், மற்றொரு கதவு பெங்களூரு வழியாக திறந்துள்ளது. இந்த முறை விராட் கோலியுடன் இணைந்து விளையாடுவது  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Leave a Comment