அஜித் என்பவர் யார்.? இயக்குனர் ஹச். வினோத் கொடுத்த பதில்

நடிகர் அஜித்குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில்  வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து சூப்பராக எடுக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் அஜித் மிகப் பெரிய ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் மங்காத்தாவுக்கு பிறகு நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. துணிவு திரைப்படத்தில் அஜித்துடன்   இணைந்து சமுத்திரக்கனி, மகாநதி,  சங்கர்..

ஜான் கொக்கன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர் படம் அடுத்த வருடம் பொங்கலை குறிவைத்து ரிலீஸ் ஆகிறது இந்த படத்தை எடுத்து விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீசாக உள்ளதால் பொங்கல் ரைஸில் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நினைவு படத்தின் இயக்குனர் ஹச். வினோத் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அப்பொழுது அஜித் என்பவர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு ஹச். வினோத் தீர்க்கதரிசி என பதில் அளித்துள்ளார். ஏற்கனவே ஒரு தடவை அஜித்தை பற்றி அவர் சொன்னது என்னவென்றால்.. ஒருவர் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் அதற்காக ஒட்டுமொத்த தொழிலையும் பொதுமைப்படுத்தாதீர்கள்..

அஜித் சாருக்கு கூட இப்படி தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கி பேசுவது பிடிக்காது அவரை பொறுத்தவரை படத்தின் வெற்றி / தோல்வி முக்கியமில்லை படக்குழுவினர் நேர்மையான சிந்தனையுடன் இருக்க வேண்டும்.. மதிக்கப்பட வேண்டும் வெற்றி வரும் போது அதற்கான மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்பார் இதனை ஹச். வினோத் கூறி இருந்தார்.

Leave a Comment

Exit mobile version