சினிமாவில் வெகுளிதனமாக நடித்த இவரா.? கமல், நெப்போலியனுக்கு இப்படிபட்ட வெற்றி படத்தை கொடுத்தவர்.? ஷாக்காக்கும் ரசிகர்கள்.

திரை உலகில் நீண்ட நாட்கள் பயணித்த நடிகர்கள் பலரும் தனது பன்முகத் தன்மையில் வளர்த்துள்ளனர் இப்போது இருக்கும் பிரபலங்கள் தான் பன்முகத் தன்மை கொண்ட நடிகராக இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு பன்முகதன்மை கொண்டவர்களாக பலர் மாற்றி சினிமாவில் வலம் வந்தனர்.

அந்த வகையில் காமெடியான இருப்பவர்கள் கூட படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளனர் அதே போலத்தான் கேரளாவைச் சேர்ந்த பிரதாப் போத்தன் மலையாளத்தில் சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடைய வில்லை என்றாலும் தமிழில் இவரது நடிப்பு, இயக்கம் பெரும் பங்குவகுத்து .

இவர் நடிப்பில் வெளியான சிவப்பு, மூடுபனி, குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் போன்ற பல்வேறு படங்களில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி இன்றுவரையிலும் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடித்து வருகிறார்.

தமிழையும் தாண்டி இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் நடித்து  சினிமாவில் வெற்றி கண்டார். இப்படி வந்த இவர் 80 கால கட்டத்தில்  டாப் நடிகையாக வலம் வந்த ராதிகாவை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை சிறப்பாக போயிருந்தாலும் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர். அதற்காக சினிமாவை விட்டு வெளியே வராமல் அதன் பின்னும் நடிப்பிலும், இயக்கத்திலும் பெரும் பெரும் வெற்றி கண்டார்.

எல்லா படங்களிலும் வெற்றியை நோக்கி பயணித்தாலும் இவரது ஒரு சில திரைப்படங்களில் படுதோல்வியை சந்தித்தன. அந்த வகையில் சத்யராஜ் நடித்த ஜீவா என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தது அதுபோல கார்த்தி வைத்து லக்கி மேன் என்ற படத்தையும்எடுத்திருந்தார்  மிகப்பெரிய தோல்வியாக படமாக மாறியது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார் இயக்குனரும் நடிகருமான பிரதாப்போத்தன். இவர் கமலை வைத்து “வெற்றிவிழா” என்ற மாபெரும் படத்தை எடுத்து இருந்தார் இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நீண்ட நாட்கள் ஓடி கமலுக்கே நல்லதொரு பெயரை பெற்றுக் கொடுத்தது.

இதை தொடர்ந்து அவர் சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தை 1994ஆம் ஆண்டு இயக்கியிருந்தார் இந்த படத்தில் நெப்போலியன், சரண்யா ஆகியோர் நடித்து இருந்தனர் இந்த படம் வசூலை வாரி குவித்தது அதிக நாட்கள் ஓடிய படங்கள் லிஸ்டில் இந்த படமும் இடம் பெற்றது. நெப்போலியனுக்கு இந்தப்படம் மிகப்பெரிய ஒரு படம் அவர் கேரியரில் மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்கி கொடுத்தார் பிரதாப் போத்தன்.

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நாம் இவரை நடித்து தான்  பெரிதும் பார்த்தோம் ஆனால் இவருக்கும் இப்படி ஒரு திறமை இருந்தது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment