நடிகர் ஆர்யா தமிழ் சினிமா உலகில் எடுத்த உடனையே தனது திறமையை காட்டி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அந்த அளவிற்கு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் இவர் நடிப்பில் வெளியான நான் கடவுள், ஒரு கல்லூரியின் காதல், வட்டாரம், மதராசப்பட்டினம், பாஸ் என்கின்ற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார்.
தற்பொழுதும் பல்வேறு புதிய படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இவர் நடித்த நடிகைகளுடன் இவர் பழகுவதால் இவரை ரசிகர்கள் அனைவரும் பிளேபாய் என அழைப்பது வழக்கம். இப்படி ஓடிக்கொண்டு இருந்த ஆர்யா தன்னைவிட 17 வயது குறைந்த நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது சினிமா உலகிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஆர்யா அனுஷ்காவுடன் சேர்ந்து இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார் அப்பொழுது காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் ஆர்யாவும் அனுஷ்காவும் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் படம் குறித்தும் சினிமா குறித்தும் பேசி வந்தனர். அப்பொழுது ஜில் ஜங் ஜக் என்ற வரிசையில் உங்களுக்கு பிடித்த நடிகைகளை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்பொழுது நடிகர் ஆர்யா சொன்னது ஜில் லிஸ்டில் நயன்தாரா அனுஷ்கா மற்றும் ஜங் லிஸ்டில் அமலா பால் ஜக் லிஸ்டில் தமன்னா காஜல் அகர்வால் எனக் கூறினார்.
ஜில் என்றால் சூப்பரான நடிகை ஜங் என்றால் சுமாரான நடிகை, ஜக் என்றால் மொக்கையான நடிகை என்பது பொருள்.. இப்படி ஆர்யா பேசிய வீடியோ இணையதள பக்கத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..