தமிழ் சினிமாவில் எந்தந்த பிரபல நடிகர், நடிகைகள் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ளார்கள் என்பதைப்பற்றிய தற்போது பார்ப்போம்.
பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் காரை அந்த நிறுவனம் ஒருவருக்கு விற்கின்றது என்றால் அந்தக் காரை வாங்கும் யாராக இருந்தாலும் அவர்களின் மொத்த ஸ்டேட்டசையும் பார்த்து அதற்கு அவர்கள் தகுதியாக இருந்தால் மட்டுமே அந்த காரை அவர்களுக்கு விற்பதற்கு கொடுப்பார்கள்.
பொதுவாக இந்த காரை அந்த காலகட்டத்தில் ஜமீன்தார்கள் மட்டும்தான் பயன்படுத்துவார்கள். இந்த காரின் ஆரம்ப விலை 3 கோடி ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மல்லிகா ஷெராவத் செலப்ரட்டி இந்த காரை வாங்குவதற்காக போய் உள்ளவர்.
ஆனால் அந்த நிறுவனம் இவருக்கு இந்தக் காரை வாங்கும் அளவிற்கு தகுதி கிடையாது என்று மறுத்து விட்டார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் யார் யார் இந்த காரை பயன்படுத்துகிறார்கள் என்ற லிஸ்ட்டை தற்போது பார்ப்போம்.
சங்கர் : தமிழ்நாட்டில் முதன் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஓனர் என்று இயக்குனர் சங்கரை தான் அனைவரும் அழைத்தார்கள். இவருடைய காரின் விலை மூன்று கோடியே 50 ஆயிரம் ஆகும்.

பிரதாப் சி ரெட்டி : மருத்துவத்துறையில் ஜாம்பவானான அப்போலோ மருத்துவமனையில் பவுண்டர் பிரதாப் சி ரெட்டி இந்த காரை வாங்கியுள்ளார்.

விஜய் : நம்ம இளைய தளபதி விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை மூன்று கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

ஷிவ் நாடார் : சாஃப்ட்வேர் கம்பெனி எச்சிஎல் பவுண்டரான ஷிவ் நாடார் இந்த காரை வாங்கியுள்ளார். இவர் தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடியில் தான் பிறந்தார்.இவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய பிசினஸ் மேனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் : இந்தியாவின் ஆஸ்கர் நாயகனான ஏ ஆர் ரகுமான் ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள கார்களை வைத்துள்ளார். இருந்தாலும் இவர் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மீது இருந்த மரியாதையால் இந்த காரை வாங்கியுள்ளார்.

தனுஷ் : தமிழ் சினிமாவில் நடிகரும், தயாரிப்பாளருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார்.

கிரன் குமார் : லலிதா ஜுவல்லரியின் ஓனர்ரான கிரண்குமார் உழைப்பால் உயர்ந்தவர். இவர் மக்களுக்கு இடையே நல்ல மதிப்பை பெற்றதால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒப்புதல் கொடுத்து இந்த காரை கிரண்குமார் வாங்கியுள்ளார்.

ரமேஷ் பாபு: தமிழ்நாட்டை சேர்ந்த ரமேஷ் பாபு ஒரு விவசாயி ஆவார். இவர் முதன்முதலில் மாருதி வேனை வாடகைக்கு விட்டு வந்தார். பிறகு பிஎம்டபிள்யூ,ஆடி போன்ற 75க்கும் மேற்பட்ட காரை வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்தார். இவருடைய குறிக்கோளே அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதுதான். இவருடைய வளர்ச்சியை பார்த்து அந்த நிறுவனம் இவருக்கு காரை கொடுத்து விட்டது.

சந்தானம் : காமெடியில் கலக்கி கொண்டு வரும் சந்தானம் தற்போது ஹீரோவாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். தற்பொழுது இவர் இந்த காரை புக் செய்துள்ளாராம். இருக்கும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதால் இந்த நிறுவனம் விரைவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
