அஜித்துக்காக காத்துக் கிடந்தது போதும்.. வேற ஹீரோவை வைத்து புதிய படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்.!

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் அண்மையில் வலிமை படம் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைத்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் சந்தோஷமாக கமிட்டாகியுள்ளார்.

அஜித்தின் 61வது திரைப்படத்தை ஹச். வினோத் எடுக்கவுள்ளார். அதை தொடர்ந்து அஜித்தின் 62 வது திரைப்படத்தை நயன்தாராவின் காதலன் வினேஷ் எடுக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் பல மாதங்களுக்கு முன்பாகவே சூரரைப்போற்று, இறுதிச்சுற்று போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்ட சுதா கொங்கரா அஜித்துக்காக ஒரு gangster கதையை வைத்து உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

அண்மையில் கூட நடிகரும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சுதா கொங்கரா அஜித்துக்காக மாஸ் கதை எழுதி உள்ளார் என கூறினார். அப்படிப் பார்க்கையில் அஜித்தின் 62வது திரைப்படத்தை சுதாகொங்கரா இயக்க அதிக வாய்ப்புகள் இருந்தது ஆனால் அஜித்தோ விக்னேஷ் சிவனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் இதனால் அந்த கதையை அப்படியே இருந்தது.

இந்த நிலையில் சுதா கொங்ரா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான சூர்யாவும் கெங்ஸ்டர் கதை ஒன்றைச் சொல்லி ஓகே செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அப்படி பார்வையில் அஜித்துக்கு வைத்திருந்த கதையை தான் தற்போது சூர்யாவுக்கு சொல்லி ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற கேள்வியும் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா நிச்சயம் அஜித்துக்கு எழுதிய கதையை அப்படியே வைத்திருப்பார் வெகுவிரைவிலேயே அஜித்தின் 63 வது  படத்தில் இவர்கள் இணையப் போவது கிட்டத்தட்ட உறுதி என்ற தகவலும் வந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் அஜித் உறுதியாக சொல்லும் வரை இந்த தகவல் உலவிக் கொண்டுதான் இருக்கும்.

Leave a Comment