பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும்போதே ரோஷினிக்கு வெள்ளித்திரையிலிருந்து எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்துள்ளன- லிஸ்ட் இதோ.!

பாரதிகண்ணம்மா சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வெளியேறி உள்ளவர் நடிகை ரோஷினி. ரோஷினி இந்த சீரியலில் நடித்து அதன் பிறகுதான் அவரது பயணம் பெரிய அளவில் மாறியது மாடலிங் துறையில் இதற்கு முன்பு அவர் பயணித்த இருந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு இடம் படிக்கவில்லை.

ஆனால் இந்த சீரியலில் அவருக்கு கண்ணம்மா என்ற கதாபாத்திரம் பேரையும் புகழையும் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான ரசிகர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டார். விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக  இப்படி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த ரோஷினி இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பல்வேறு படவாய்ப்புகள் குவிந்தாம்.

ஆனால் அப்பொழுது அந்த படங்களை மறுத்து விட்டு  பாரதிகண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடித்தும் உள்ளார். சீரியல் ஓடிக்கொண்டிருந்தாலும் கிடைக்கின்ற நேரங்களில் மாடல் அழகி என்பதால் விதவிதமான புகைப்படங்களை அள்ளி வீசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் மேலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தற்போது பாரதிகண்ணமா சீரியல் இருந்து வெளியேறி தற்போது வெள்ளித் திரையில் பட வாய்ப்புகளில் கமிட்டாகியிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது  ரோஷினிக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம் அந்த வகையில் ஜெய்பீம் திரைப்படத்தில் செங்ககோணி கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு  தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாம்.

அதுபோல பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ரோஷினிக்கு தான்   வாய்ப்பு இருந்ததாம். ஆனால் அப்போதே சீரியலில் நடித்த காரணத்தினால் அந்த படங்களை தவிர்த்துள்ளார்.

Leave a Comment