பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டே மிகப்பெரிய திரைப்படத்திலும் நடித்தேன் என தன்னுடைய கடின உழைப்பை வெளிப்படுத்திய சீரியல் பிரபலம்.!

0
pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் கூட்டு குடும்பத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இருக்கும் இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நான்கு அண்ணன் தம்பிகள் அனைத்தையும் சமாளித்து எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உன்னதப்பூர்வமாக வெளிப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக தொடர்ந்த டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்த வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முக்கியமாக இந்த அளவிற்கு இந்த சீரியல் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் கதிர் மற்றும் முல்லை கேரக்டர் தான் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

அந்த வகையில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் தான் குமரன் இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது அந்த வகையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டே அமேசான் பிரைம் மூலம் உருவான வதந்தி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டே வதந்தி திரைப்படத்தில் நடித்தேன் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு நாள் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்காமல் இல்லை தூங்காமல் கூட மாறி மாறி நடித்தேன் என தன்னுடைய கடின உழைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இதற்கு ரசிகர்கள் மிகவும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்.