இந்த வாரத்தில் அதிக வசூலை அள்ளிய 5 திரைப்படங்கள் – எது தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.

தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து அசத்துகின்றன.  அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி தோல்வி அடைகின்றன ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் அந்த வகையில் இந்த வருடம் பல்வேறு படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக இந்த வாரத்தில் எந்தெந்த படங்கள் நல்ல வசூலை பெற்று முதல் ஐந்து இடத்தை பெற்றுள்ள படங்கள் எது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம். திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கான மவுஸ் இன்னும் குறையாமல் இருப்பதால் வசூல் பின்னி பெடலெடுக்கிறது  இதுவரை மட்டுமே 70 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் விருமன். இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாகக் கொண்டு உருவானது. இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர்.

மற்றும் கருணாஸ், ராஜ்கிரண், சிங்கம்புலி, சூரி, சரண்யா பொன்வண்ணன், மைனா நந்தினி, மனோஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி  கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு நல்ல வசூலை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த படங்கள் தற்போது சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளன.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் வெளிவந்த படங்களில் இந்த வாரத்தில் அதிகம் வசூலை அள்ளிய திரைப்படம் எது என்பது குறித்து தகவல்களை உள்ளது. அந்த வகையில் முதலிடத்தில் திருச்சிற்றம்பலம் அடுத்ததாக கார்த்தியின் விருமன், துல்கர்  சல்மானின் சீதாராமம், விஜய் தேவர் கொண்டாவின் லீகர், அருள்நிதி என் டைரி போன்ற நல்ல வசூலை அள்ளிய திரைப்படங்களாக கூறப்படுகிறது.

Leave a Comment