டிக்கெட் புக்கிங்கில் முன்னேறிக் கொண்டே போகும் கேஜிஎப் 2 பின்னால் வரும் பீஸ்ட் – எங்கு தெரியுமா..

விஜயின் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்து இழுக்க படக்குழு முழுவதும் பல்வேறு வேலைகளை செய்து வருகிறது மேலும் பல அப்டேட்களையும் கொடுத்து வருகிறது அந்த வகையில் அரபி குத்து, ஜாலியோ ஜிம்கானா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதனை தொடர்ந்து ஓரிரு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்திய நிலையில் நேற்று பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனது.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போல படத்தின் டிரைலர் விருவிருப்பாக ஆக்ஷன் பிளாக் நிறைந்ததாக இருந்தது படமும் காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி போன்ற பல டாப் நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் எந்த படத்தை பார்ப்பது என்று தெரியாமல் முழி பிதுங்கிப் போய் இருக்கின்றனர். இருப்பினும் அதிகபட்சமாக கேஜிஎப் திரைப்படத்திற்கு தான் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் இந்த இரண்டு திரைப் படத்திற்கான டிக்கெட் சேல்ஸ் தொடங்கி உள்ளதால் அதன்படியே கேஜிஎப் திரைப்படத்திற்கு தற்போது 5000 வரை டிக்கெட் செய்யவுள்ளதாகவும், விஜயின் பீஸ்ட் படத்தின் டிக்கெட்டும் 3500 வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் அதை சுற்றி இருக்கும் கேரளா தெலுங்கு ஆகிய மொழிகளில் விஜய்யின் மார்க்கெட் அதிகமாக இருந்தாலும் அண்மையில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால் KGF 2 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது இதனால் விஜயின்  பீஸ்ட் படத்தின் வசூலில் சற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை

Leave a Comment