இந்திய அணி தடுமாறிய போதெல்லாம் ஒரு வீரான நின்னு மேட்சை மத்தியவர் இவர் – அவருக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.! முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் அதிரடி.

0
banger
banger

இந்திய அணி நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி என பல்வேறு தொடர்களில் விளையாட இருக்கிறது முதலாவதாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் பல்வேறு சிறந்த வீரர்களை இந்திய அணி செலக்ட் செய்து உள்ளது.

மிடில் ஆர்டரில் சிறந்த வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர் அந்த வகையில் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பாக அறிமுகமாகி விளையாடி வரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். அதேபோல இந்திய ஏ அணியில் விளையாட வந்த ஹனுமான் விஹாரி தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

பதினொரு பிளேயர்கள் யார் என்பதே தற்போதைய கேள்வி குறியாக எழுந்துள்ளது அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ஹனுமான் விஹாரி ஆடுவாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பாங்கர் தனது கருத்தை கூறியுள்ளார்.

அவர் சொல்ல வருவது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய போது எல்லாம் ஒரு ஆளா நின்னு இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்  விஹாரி. இதுவரை அவர் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை காட்டி உள்ளார்.

இப்படி கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறவர் ஹனுமான் விஹாரி அவருக்கு தான் அதிக வாய்ப்புகள் தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார் சஞ்சய் பாங்கர். ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை நாம் சற்று உட்கார வைத்து புதிய வீரரை பயன்படுத்தலாம் ஆனால் இதுவரை சிறப்பான ஒரு வீரராக திகழ்ந்து வருகிறார்  ஹனுமன் விஹாரி.