பிரியா பவானி சங்கரிடம் கேட்ட மாதிரி என்கிட்ட கேட்டா இதுதான் நடக்கும்..! நடிகை ரேகா நாயர் அதிரடி பேச்சு.!

0
rekha-nair
rekha-nair

அண்மைக்காலமாக வெள்ளி திரைக்கு புதுமுக நடிகர் நடிகைகளின் வரவேற்பு அதிகரித்துள்ளது குறிப்பாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வரும் நடிகர் நடிகைகள் தான் ஏராளம். அவர்களில் ஒருவராக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் தற்போது தாவி உள்ளவர்தான் ரேகா நாயர்.

இவர் சின்னத்திரையில் பூவே உனக்காக, ஆண்டாள் அழகர், வம்சம், பைரவி, பகல் நிலவு, பாலகணபதி என பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் இந்த வருடம் பார்த்திபன் இயக்கி நடித்து  உருவான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே சற்று வித்தியாசமாக நடித்திருந்தாலும்..

இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படுவதால் தற்பொழுது அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் சினிமா உலகில் கிடைக்கும் என தெரிய வருகிறது. அதேசமயம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிர்த்து பேசும் நடிகையாகவும் இவர் தெரிய வருகிறார் ஏன் அண்மையில் கூட இரவின் நிழல் படத்தில் நடித்ததற்காக பலர் இவரை விமர்சனம் செய்தனர் ஆனால் அதற்கு தனக்கு தெரிந்த வகையில் பதிலடி கொடுத்தார்.

இப்பொழுது பல்வேறு விதமான பேட்டிகள் கொடுத்து வருகிறார் அதில் ஒன்றில் ரேகா நாயர். நடிகை பிரியா பவானி சங்கர் பற்றி  பேசியுள்ளார். புதிய தலைமுறை டிவியை விட்டு வெளியேறிய பின் சீரியலில் நடித்து வந்தார். ஒரு சீரியலில் நானும், பிரியா பவானி ஷங்கரும் இருந்தோம் அப்பொழுது பிரியா பவானி சங்கரை பார்த்து நைட் நீ வேற எங்கேயாவது போனியா என கேட்டார்கள்.

ஆனால் அப்பொழுது பிரியா பவானி சங்கர் எதுவும் பேசாமல் கடந்து விட்டார் இப்பொழுது அவர் ஒரு பெரிய நடிகையாக மாறிவிட்டார். என்னை போன்ற ஆட்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் போடா மயிறு என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுவோம் இன்னும் கொஞ்சம் தெம்பு இருந்தால் கழட்டி தூக்கி அடித்து விடுவேன் என சொல்லி பேட்டியை அதிர வைத்தார்.