தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் நடிகர் துருவ் விக்ரம். இவர் தற்போது பைசன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளது இதனை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் இரண்டாவது சிங்கள் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனவும் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த திரைப்படம் முழு நேர விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் துரு விக்ரம் அவர்களுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தில் லால், பசுபதி, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் சில ஆண்டுகளாக உருவாக்கி வரும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது இதனால் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே துருவ் விக்ரம் அவர்கள் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இவரது பைசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.