புது வீட்டிற்கு போகும்பொழுது நாம் குடியிருந்த பழைய வீட்டில் இந்த பொருளை வைத்து விட்டு சென்றாள் தத்திரியம் நமக்கு வராது…

பொதுவாக வீடு என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பலரும் வாடகை வீட்டிலும் தங்கி வருகிறார்கள். இவ்வாறு வீடு நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்று என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படிப்பட்ட நிலையில் நம்மளுடைய சொந்த வீடாக இருந்தாலும் சரி வாடகை வீடாக இருந்தால் நாம் குடி போகும் பொழுது முறைப்படி அதற்கான விஷயங்களை செய்ய வேண்டும்.

அந்த வகையில் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு இடம்பெயரும் பொழுது இதை செய்தால் ஐஸ்வர்யா லட்சுமி உங்களுடன் இருப்பாள் அதனைப் பற்றி தற்பொழுது பார்க்கலாம். அதில் முதலாவதாக நாம் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு போகும் பொழுது நான் தங்கி இருந்த வீட்டை சுத்தமாக துடைத்து விட்டு செல்லக்கூடாது. நம் வீட்டில் இருக்கும் பண்ட பாத்திரங்களை எடுக்கும் பொழுது வீடு கொஞ்சம் அழுக்காகும் இருந்தாலும் பரவாயில்லை.

அழகுடன் குடியிருந்த வீட்டை விட்டு செல்ல வேண்டும் சுத்தமாக துடைத்துவிட்டு நம் குடியிருந்த வீட்டை அந்த வீட்டின் ஓனர் கையில் ஒப்படைக்க கூடாது. இரண்டாவதாக நாம் குடியிருந்த வீட்டில் நாம் பயன்படுத்திய ஏதாவது ஒரு பழைய பொருளை விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். பழைய துடைப்பம், பாய் இப்படி நீங்கள் பயன்படுத்திய ஏதாவது ஒரு பொருளை அந்த வீட்டில் விட்டுச் செல்லுங்கள் அதன்பிறகு கொஞ்சமாக மஞ்சள் பொடி நீங்கள் குடியிருந்த வீட்டின் மூளை முடுக்குகளில் தூவி விட வேண்டும்.

இப்படி செய்தால் நீங்கள் தங்கி விட்டு சென்ற அந்த வீட்டிற்கு நீங்கள் காலி செய்து விட்டு சென்ற அந்த வீட்டிற்கும் இன்னொரு குடும்பம் வரும் அந்த குடும்பம் சுபிட்சயமாக இருக்கும். மேலும் அந்த வீட்டை விட்டு சென்று புது வீட்டிற்கு சென்ற உங்களுக்கும் ஐஸ்வர்யத்தோடு சுபிட்சயமாக நல்லபடியாக இருப்பீர்கள். பிறகு நம்மளுடைய புது வீட்டிற்கு செல்லும் பொழுது நிறைக்கூடம் தண்ணீர், கல் உப்பு, துவரம்பருப்பு, வெள்ளம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை மங்களகரமான பொருட்களை முதலில் எடுத்துச் செல்ல வேண்டும்.

பிறகு பூஜை அறையில் பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி மூன்று பேரும் ஒன்றாக இருக்கக்கூடிய படத்தினை பூஜை செய்து கொண்டு சென்ற பொருட்களை எல்லாம் சுவாமிக்கு முன்பு வைத்து புதுசாக பசும்பால் காய்ச்சி பொங்க விட்டு அந்த பாளையம் வைத்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பூஜை செய்த பொருட்களை வைத்து அன்று சமையல் செய்ய வேண்டும் குறிப்பாக அதிகமாக காய் போட்ட சமைப்பது நல்லது பால் காய்ச்சிய புது வீட்டில் கட்டாயமாக வீட்டில் இருப்பவர்கள் அன்றைய நாள் இரவு தங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இதனால் அனைத்தையும் கடைப்பிடித்தால் என்றும் லட்சுமி நம்முடன் இருப்பாள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment