நான் கல்லூரி படிக்கும்போது எல்லோரும் என்னை “செல்லமா” இப்படி தான் கூப்பிடுவாங்க.. சூர்யாவே சொன்ன சூப்பர் செய்தி.

திரை உலகில் இருக்கும் ஒவ்வொரு ஹீரோவும் தனக்கு பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் சமீபகாலமாக அஜித், விஜய் ரசிகர்கள் பெரிதும் ஆக்ஷன் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் காமெடி கலந்த படங்கள் எடுக்கிறார் விக்ரம் வித்தியாசமான திரைப்படங்களை எடுத்துக் கொண்டு இப்படி ஒவ்வொருவரும் தனக்கென ஒருகதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் நடிகர் சூர்யா.

சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களைப் தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு மட்டுமல்லாமல் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் வேற லெவல் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகியவை வெளிவந்து ரசிகர்கள் கொண்டாட வைத்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது கல்லூரி காலகட்டத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இவர் படிக்கும் போது இவரை பிகில் விசில் என்று செல்லமாக அழைப்பார்களாம். அதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யாவே கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment