அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும்போது எங்க படமும் ரிலீஸ் ஆகும்,? இரண்டாவது முறையாக ரஜினியை களத்தில் சந்திக்க இருக்கும் முன்னணி நடிகரின் படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை கொடுப்பதை சமீபகாலமாக வைத்திருக்கிறார் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடிக்கும் இதை தான் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்.

அந்த வகையில் அண்ணாத்த படத்தில் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து முடித்து உள்ளார். ஆரம்பத்தில் ரஜினி மற்ற முன்னணி நடிகர்களுடன் மோதி பார்ப்பது உண்டு. அதில் பெரும்பாலும் ரஜினியின் கையே ஓங்கி இருந்தன.

அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் மோதின இதில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரஜினி படத்தை விட அஜித்தின் விசுவாசம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது ரஜினி அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தற்போது ஷூட்டிங் அனைத்தும் முடிவடைந்து தற்போது மற்ற வேலைகளை ரெடியாகி இருக்கிறது அது போல அஜித்தின் வலிமை திரைப்பட சூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து வேற லெவல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் கசிகின்றன.

மேலும் இந்த படத்தின் சூட்டிங் இன்னும் 10% வெளிநாடுகளில் எடுக்க வேண்டிய சூழல் நிலவி உள்ளது அதனால் படக்குழு பொறுமை காத்து இருக்கிறது மேலும் மற்ற வேலைகளை முன்புறமாக களத்தில் இறங்கி வேலை நடக்கிறது.

அப்படி பார்க்கையில் அஜித்தின் வலிமை,  ரஜினியின் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் நிச்சயம் தீபாவளி ரேஸில் கலந்து கொண்டு மிகப்பெரிய  அளவில் மோத இருப்பதாக தகவல் கசிகின்றன

அப்படி வந்தால் அதை  திருவிழாவை போல  கொண்டாட ரெடியாக இருக்கின்றனர்  ஆனால் இவர்கள் இருவரும் மோதுவதால் வசூல் பாதிக்கப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு எந்த படமும் பின்வாங்கி போகுமா.? போகதா.? என்பதே தெரியாமல் இருந்து வருகிறது அது போல இந்த இரண்டு திரைப்படங்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Leave a Comment