சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் லோகேஷ் கனகராஜ்.? லியோ படத்தில் இப்படி ஒரு ஸ்பெஷலா..

வெள்ளித்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் பல கோடி வரை வசூல் செய்து விட்டது. மேலும் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.இதனைத் தொடர்ந்து பார்த்தால் லியோ திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறதாம்.

மேலும் இதில் நடிகை த்ரிஷா பிரபல நடிகர் சஞ்சய் தத் போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்து வருகிறார்களாம். லியோ திரைப்படம் வெளியாகிவிட்டால் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக தற்பொழுதே பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் லியோ திரைப்படத்தைப் பற்றி புதிதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் சுமார் 2000 நடன கலைஞர்களை ஆடவைப்பதற்கு படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். மேலும் இவ்வளவு பேர் ஒரு பாடலில் ஆடுவது என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை என்பது நமக்கு தெரிந்த விஷயம் என்றாலும் இது அதிகாரப்பூர்வ தகவலா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இதனை பற்றி அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவருமா இல்ல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தர காத்திருக்கிறாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மேலும் லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது அடுத்த அடுத்த திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது லியோ திரைப்படம் விரைவில் வெளிவந்து விட்டால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

vijay
vijay

Leave a Comment