ஹிட்லர் மாதிரி ஒரு ஆள் கிட்ட போச்சுன்னா இந்த உலகம் எப்படி இருக்கும்.? மிரட்டலாக வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் 4 நிமிட காட்சி…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைகாரன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து உள்ளார். இந்த பிச்சைக்காரன் 2 படத்தில் அமைந்துள்ள நான்கு நிமிட காட்சியை இன்று வெளியிடுவதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது அந்த வகையில் தற்போது இந்த 4 நிமிட காட்சி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறிய தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை சசியின் உதவி இயக்குனர் தயாபரன் அவர்கள் இயக்கிய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி தற்போது வீடு திரும்பி உள்ளார் வீடு திரும்பிய உடனே பிச்சைக்காரன் 2 படத்தின் அப்டேடுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் அமைந்துள்ள ஒரு நான்கு நிமிட காட்சியை தற்போது யூடியூபில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version