தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலங்களாக மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் சில மாதங்களுக்கும் முன்பு நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன்பின்தான் இவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவ ஆரம்பித்தது என்றால் அது மிகையாகாது.கோடி கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தமிழ் திரையுலகில் உள்ள பிரபலமான நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.
மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அழகிய பெருமையும் இவருக்கு உண்டு.ஆரம்பத்தில் பாடலாசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய விக்னேஷ் சிவன் போடா போடி என்னும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். மேலும் அதன் பிறகு இறுதியில் தற்பொழுது, விக்னேஷ் சிவனால் இயக்கப்பட்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.நீண்ட காலமாக காதலித்து வந்த இவர்கள், சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். மிகவும் கோலாகலமாக நடந்த இவர்களுடைய திருமணத்தில் ரஜினிகாந்த், அட்லி, சிவகார்த்திகேயன், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஜாலியாக ஹனிமூன் சென்று கொண்டாடி வந்த இவர்கள் தற்பொழுது படப்பிடிப்பில் தீவிரமாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவரை தொடர்ந்து விக்னேஷ் சிவன் AK 62 படத்தினை உருவாக்குவதற்காக ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார்.தனது மனைவிக்காக ஒரு விளம்பரம் ஒன்றை இயக்கியுள்ளார், அதனுடைய புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ஒன்லி ஃபார் மை நயன்தாரா என்று குறிப்பிட்டுள்ளார்.