Vijay : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருபவர் தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் நடித்துள்ளார் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது. அடுத்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து தளபதி 68 படத்திலும் விஜய் நடிக்க ரெடியாகி உள்ளார்.
இது ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க மறுபக்கம் விஜய் அரசியலில் இறங்குவதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வருகின்றன. சமீபத்தில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நிதி உதவிகள் கொடுத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜயின் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
தலைமையில் அடுத்தடுத்த ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. பெரியாரின் பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்தனர். அதேபோல் மறைந்த காயிதே மில்லத்தின் நினைவு நாளில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் இரண்டாம் தேதி அந்தந்த மாவட்டங்களில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கின்றனர் மேலும் நம் தேசத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வீட்டுக்கு சென்று அவர்களை கௌரவப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அதில் அவர் சொன்னது சமீபத்தில் பெரியார் சிலைக்கு புஸ்ஸியார் உள்ளிட்ட ரசிகர்கள் மாலை போட்டனர் தற்பொழுது காந்தி சிலைக்கும்.. ஏன் இந்த தலைவர்களின் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்ய மாட்டாரா இது என்ன ஒளிந்து ஆடும் அரசியல் என விமர்சித்துள்ளார்.

