விஜயின் “பீஸ்ட்” படம் அள்ளிய மொத்த வசூல் இவ்வளவுதானா..? 200 கோடின்னு சொல்லுறது பொய்யா..

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள்தான் அந்த வரிசையில் இன்னொரு படத்தை சேர்க்க தற்பொழுது தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகினாலும்..

அதே சமயம் இந்த படத்தில் ஆக்ஷன் காமடி என அனைத்தும் கலந்து இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவும் விஜய் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் குறித்து தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது தளபதி விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன்..

அபர்ணாதாஸ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் அள்ளியதாக கூறப்பட்டது ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விஜயின் பீஸ்ட் படம் 200 கோடி எல்லாம் வசூல் செய்யவில்லையாம் இந்த படம் ஒட்டுமொத்தமாக 170 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

OTT வியாபாரத்தையும் சேர்த்து இந்த படம் 120 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 20 கோடி தான் அதிகமாக வசூலித்து உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது இதோ நீங்களே பாருங்கள்.. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த செய்தி இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

vijay
vijay

Leave a Comment