காஞ்சனா 4 என்ன நிலைமையில் உள்ளது.? அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்

ragava-lawrence-
ragava-lawrence-

சைலண்டாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர்  நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் முதலில் நடன இயக்குனராக திரையுலகில்  அறிமுகப்படுத்திக் கொண்டார் அதனைத் தொடர்ந்து  நடிகராக ஹிட் படங்களை கொடுத்து வந்தால் ராகவா லாரன்ஸ்..

திடீரென  இயக்குனராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திரையு உலகில் வளர்ந்து இப்போ வெற்றி நடை கண்டு வருகிறார் என்னதான் இப்படி பயணித்தாலும் ஹீரோவாக ஜொலிக்க வேண்டும் என்பதே இவருக்கு மிகப்பெரிய ஆசை அதை சமீபகாலமாக நிறைவேற்றியும் வருகிறார் கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3,  சிவலிங்கா போன்ற படங்கள்..

நல்ல விமர்சனத்தை பெற்று  மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து கைவசம் ருத்ரன்,  அதிகாரம், சந்திரமுகி 2,  துர்கா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் வைத்திருக்கிறார் இதில் முதலாவதாக ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது. இப்படி திரை உலகில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ்..

அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும்,  தன்னுடைய அடுத்த படங்கள் குறித்தும் பேசி வருகிறார்.  காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற படங்கள்  வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது இப்படி இருக்க காஞ்சனா 4 எப்பொழுது உருவாகும் என பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 ஸ்க்ரிப்ட் ஒர்க் நடந்து வருகிறது ..

நான் கைவசம் இருக்கும் படங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு கண்டிப்பாக காஞ்சனா 4 இயக்கி அதில் நடிப்பேன் என உறுதியாக கூறி இருக்கிறார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள்  இதற்காகத்தான் நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம் சிக்கிரம் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு காஞ்சனா 4 எடுங்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து இந்த செய்திக்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.