அந்த படத்துல என்ன நடிக்க வைத்திருக்கலாமே என்ற தளபதி..! தூக்குல தொங்க என்னால ஆகாது என்ற மிஸ்கின்..!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் தளபதிக்கு வந்த கதைகள் பல கை மாறியதும் உண்டு.

அப்படித்தான் மிஷ்கின் பட வாய்ப்பும் தளபதி விஜய்க்கு கை நழுவி சென்றுள்ளது அந்தவகையில் தளபதி விஜய் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் மிஸ்கின் இவர் விஜயுடன் நெருங்கிய நட்பு இருந்தது மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு கதையையும் எழுதி உள்ளார்.

அந்த திரைப்படம் வேறு எந்த திரைப்படமும் கிடையாது சித்திரம் பேசுதடி திரைப்படம்தான். அந்த திரைப்படத்தில் தளபதி விஜயின் இமேஜ் ஆக்சன் ஹீரோ போல இருந்ததன் காரணமாக அது தளபதிக்கு செட் ஆகாது என்ற காரணத்தினால் நரேனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கிய முடித்தார்.

ஆனால் இத்திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் மிகவும் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் தளபதி விஜய்க்கு இந்த விஷயம் தெரிந்து இந்த கதையை என்னிடம் சொல்லவில்லை ஏன் என இயக்குனர் மிஸ்கின் இடம் செல்லமாக கோபித்துக் கொண்டாராம்.

இதற்கு பதிலளித்த மிஸ்கின் நான் இந்த கதையை உங்களிடம் சொல்லி இருந்தால் உங்களுக்கு தகுந்தார் போல் பல மாற்றங்களை செய்ய வேண்டும் அதுமட்டுமில்லாமல் உங்க அப்பாவுக்கு ஏத்த மாதிரியும் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும் கடைசியில நான் தூக்குல தொங்கணும் அதனால தான் உங்களிடம் இந்த கதையை நான் சொல்லவில்லை.

அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் சித்திரம் பேசுதடி திரைப்படத்தை மிஸ் செய்து விட்டேன் என பலமுறை மிஷ்கினிடம் கூறியுள்ளாராம் இதை அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தளபதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தால் அதில் கண்டிப்பாக மாற்றங்கள் இருக்கும் இதனால்தான் கூறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

vijay miskin-1
vijay miskin-1

Leave a Comment