அஜித், விஜய் கூட எல்லாம் நடிச்சி என்ன புரோஜனம்.? த்ரிஷாவுக்கு சம்பளம் மட்டும் ஏறவே இல்லை.? இப்போ எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா.?

trisha
trisha

சினிமா உலகில் 15 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் த்ரிஷா தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக இருந்து வருகிறார். த்ரிஷா ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக நடிகை என்ற அந்தஸ்தை கைப்பற்றினார்.

தான் நடிகை என்பதை சரியாக புரிந்து கொண்டு படத்தின் கதையை நன்கு அறிந்து நடித்ததன் மூலம் இவர் வெகு விரைவிலேயே உச்ச நட்சத்திரங்கள் உடன் ஜோடி சேர்ந்தார்.  அந்த வகையில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நட்சத்திரங்கள் படங்களில் நடித்து வந்தார். அதில் வெற்றி கண்ட பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் வேற லெவலில் எகிறியது.

இவருக்கென  மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவருக்கு சோலோவாக கதை சொல்லத் தொடங்கினார் அதிலும் சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டதால் தற்பொழுது வரையிலும் தென்னிந்திய திரையுலகில் வெற்றி நடை கண்டு வருகிறார்.

த்ரிஷா நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் போன்ற மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகி வருகின்றன.இந்த நிலையில் நடிகை த்ரிஷா ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதாவது நடிகை திரிஷா ஒரு படத்திற்கு தற்போது சுமார் 3 கோடி வரை வாங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன.

இவர் சோலோவாக நடிக்கும் திரைப்படங்களுக்கு இன்னும் கூடுதல் சம்பளம் இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் பக்கத்தில் இருந்து கூறப்படுகிறது. சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக வலம் வரும் த்ரிஷா வுக்கு பெரும்பாலும் இவ்வளவுதான் சம்பளமா என  ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.