நடிகை அதிதி ஷங்கரின் செல்லப் பெயர் என்ன தெரியுமா.? வீட்டில் அப்படித்தான் கூப்பிடுவாங்களாம்..!

0
adithi-shankar
adithi-shankar

அண்மையில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளி வந்த விருமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால் தடம் பதித்தவர் அதிதி சங்கர். இவர் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அந்தஸ்தை பெற்றிருக்கும் இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அதிதி டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் சம்மதத்துடன் தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார்.

முதல் படமே கார்த்தியுடன் இணைந்து கிராமத்து படத்தில் பாவாடை தாவணையில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் குடி பெயர்ந்து உள்ளார். முதல் படத்திலேயே அதிதிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உருவாகியுள்ளனர் இதைத்தொடர்ந்து அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படி உடனுக்குடன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து கூடிய விரைவிலேயே முன்னணி நடிகையாக மாறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு அதிதிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமும் உருவாகத் தொடங்கியுள்ளன. தற்போது இவரது ரசிகர்கள் அதிதி பற்றிய ஏதாவது தகவல் வெளிவராதா என்று சோசியல் மீடியாவே கதி என கடந்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் அதிதியின் அப்பாவும் இயக்குனருமான சங்கருக்கு கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி 59வது பிறந்தநாள் வந்துள்ளது. அதற்கு வாழ்த்து கூறும் வகையில் அதிதி சங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய வாழ்க்கையில் சினிமாவை கொண்டு வந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் உருவாக்கிய படங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

என்னை ஒவ்வொரு நாளும் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார். அதனால் என் அப்பாவுக்கு முதலில் எப்பொழுதும் நன்றி, லவ் யூ சின்னு என குறிப்பிட்டுள்ளார். இப்படி அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு வீட்டில் அவரது செல்ல பெயர் சின்னு என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார். இந்த செய்தியை தெரிந்து கொண்டு அதிதி ரசிகர்கள் செம்ம மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.