ரோஹித் ஷர்மாவுக்கும், விராட் கோலிக்கும் என்ன வித்தியாசம்.! ஆனால் போற இடமெல்லாம் இவருக்கு மட்டும் கண்ணிவெடியா?

இந்திய அணி உலக கோப்பை போட்டிகளுக்கு முன்பு நடைபெற்ற தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றியும் கண்டுள்ளது ஆனால்  உலக கோப்பை ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் இந்திய அணியின் விளையாட்டு மிக மோசமாக இருந்துள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி அரை இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதேபோல இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதிச் சுற்ரில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதுவும் குறிப்பாக இங்கிலாந்து அணி இடம் இந்திய அணி ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் தடுமாறி அரை இறுதியில் வெளியேறியது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி கேப்டனாக இருந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளிலும் சரி, உலக கோப்பை போட்டிகளும் சரி இந்திய கிரிக்கெட் அணி எந்த விதமான கோப்பைகளையும் வென்றது கிடையாது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதியது.

அந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனால் விராட் கோலிக்கும் எந்தவிதமான கோப்பையை வெல்லும் ராசி இல்லை என்று பலர் விராட் கோலியை விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்தனர்.

ஆனால் அதே போல  ஐபிஎல் போட்டியில் ஐந்து முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் நிச்சயம் டி20 உலக கோப்பை அணி வெற்றி பெற்றும் என்று அவர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.  ஆனால் தற்போது என்ன நடந்தது?

ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும்போது ஐந்து முறை கோப்பையை பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளார் ஆனால் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும்போது ஆசிய கோப்பையையும் உலக கோப்பையையும் வெல்ல முடியாமல் தடுமாறியாது அது மட்டுமல்லாமல் இந்த இரு முக்கியமான தொடரில் ரோஹித் சர்மாவின் பங்களிப்பும் பெரிய அளவில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் இந்திய அணிக்கு சிறந்த கேப்டன் யார்? இனி வரும் போட்டிகளில் யார் கேப்டனாக இருப்பார்கள் என்று சில குழப்பங்கள் ஏற்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment