பிக்பாஸில் ஜெயித்தால் நீ என்ன பெரிய ஆளா..? ஆரி மீது கோபம் கொண்ட உதயநிதி..!

0
aari-2
aari-2

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி இந்த திரைப்படம் பிரபல நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான திரைப்படமாகும் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படமாகும்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஆரியும் நடித்துள்ளார் இவர் கமலஹாசன் பிரம்மாண்டமாக தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தவர் அந்த வகையில் இந்த போட்டியின் இறுதியில் மிக சிறப்பாக தன்னுடைய திறனை வெளிக்காட்டி  டைட்டில் வின்னர் ஆக ஆனார்.

இவ்வாறு இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு திரைப்பட வாய்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் தற்பொழுது இவருடைய நடிப்பில் அலேகா பகவான் போன்ற திரைப்படங்கள் உள்ளது. மேலும் நடிகர் ஆரி சேரன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தை இயக்குனர் அருண் ராஜா காமராஜ் அவர்கள் தான் இயக்கியிருந்தார். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது இந்தியில் மாபெரும் வெற்றி கண்ட ஆர்டிகள் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இன் நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்ட நிலையில் அப்போது பேசிய உதயநிதி பிக்பாஸ் ஆரி குறித்து பேசியுள்ளார் அப்போது அவர் கூறியது என்னவென்றால் ஆரி பிக்பாஸ் முடித்த உடன் என்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக போன் செய்தேன்  ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

aari-1
aari-1

இவ்வாறு ஆரி நடந்து கொண்டதன் காரணமாக பிக்பாஸில் ஜெயித்தால் பெரிய ஆள் ஆகி விடுவார்களா..? என கடுப்பாகி விட்டேன் ஆனால் ஒருநாள் அவரே எனக்கு போன் செய்து பேசினார் ஆனால் அவர் பேசிய பொழுது நான் எதிர்பார்த்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது பின்னர் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டேன் ஓகே என்று சொன்னார்.