வசூல் வேட்டை ஆடியது எது.? அஜித்தின் துணிவா இல்லை விஜயின் வாரிசா.?

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவரும் தற்போது தங்களுடைய படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த மாதம் இவர்கள் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே தினத்தில் மோதிக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து இந்த படங்கள் வெளியான நாளிலிருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் வாரிசு ஜெயித்ததா இல்லை துணிவு ஜெயித்ததா என்பதுதான். அது மட்டுமல்லாமல் சில வசூல் நிலவரங்கள் பொய்யான தகவலாகவே வெளியாகி இருக்கிறது.

இதனாலேயே அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து. இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த அளவிற்கு ஷேர் கிடைத்துள்ளது என்பதை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதாவது துணிவு திரைப்படம் 85 கோடிக்கு மேல் விற்கப்பட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு 108 கோடிக்கு மேல் ஷேர் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் 140 கோடிக்கு மேல் விற்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜிக்கு வெறும் 147 கோடிக்கு மேல் ஷேர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் தில்ராஜ் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் அவர்களுக்கு ஷேர் கிடைத்தது மிக கம்மியாக இருப்பதாக கூறி புலம்பி வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

அந்த வகையில் தில்ராஜ் அவர்களின் சொந்த ஊரான தெலுங்கானா மற்றும் கர்நாடகா பகுதிகளில் வெறும் 50 கோடி மட்டும்தான் வசூல் செய்து இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த ஏரியாவில் தயாரிப்பாளர் தில்ராஜ் அவர்களுக்கு வெறும் ஏழு கோடி மட்டும் தான் ஷேர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment