உன் மனசுல என்ன அந்த மாதிரி நினைப்போ..? விஜய் சேதுபதியை கன்னாபின்னான்னு கேள்வி கேட்ட பிரபல நடிகர்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு பிரபலமான நடிகர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வருகிறார்.

அந்த வகையில் நமது நடிகர் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் சந்தனம் என்ற கதாபாத்திரத்தில் எதிர்மறை ரொலில் நடித்து பெருமை சேர்த்தார்.

பொதுவாக நமது நடிகர் ஹீரோவாக மட்டுமே தனக்கு கதை பிடித்து விட்டால் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதில் அசராமல் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டுவதில் விஜய்சேதுபதி வல்லவர்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தன்னுடைய எதார்த்தமான நடிப்பை திரைப்படங்களில் வெளி காட்டியதன் மூலமாக மக்களை வெகுவாக கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் மக்கள் செல்வன் என்ற பட்டப்பெயருடன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் காயத்ரி உடன் இணைந்து மாமனிதர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தைப் பார்த்த பல்வேறு ரசிகர்களும் அவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த திரைப்படத்தைப் பார்த்த  நடிகர்  கூல் சுரேஷ் அவர்கள்  மாஸ்டர் விஜய் சேதுபதி நீ என்ன கருப்பு கமலஹாசனா என கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல் கருப்பு கமலஹாசன் தான் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

cool suresh-1
cool suresh-1

Leave a Comment