என்னாத்த நீலாம் ஆடுற.? அங்காடிதெரு ஹீரோ ஹீரோயினை அடித்து துன்புறுத்தும் இயக்குனர்.! வைரலாகும் வீடியோ

தமிழ் திரை உலகில் ஆண்டுதோறும் குறைந்த பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வியை சந்தித்து வருகின்றன. அதுபோல 2010ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் புதுமுக ஹீரோக்களை வைத்து அங்காடித்தெரு என்ற படத்தை சங்கரின் உதவி இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் இப்படத்தை இயக்கியிருந்தார்.

ஹீரோவாக மகேஷ் அவர்களும், ஹீரோயினாக அஞ்சலி அவர்களும் இப்படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தினர். இவர்களை தொடர்ந்து மற்ற முன்னணி இயக்குனரான வெங்கடேஷ் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இப்படத்தின் கதை பிரபல துணிக்கடையில் வறுமை கீழ் உள்ள மக்கள் வேலை செய்யும்போது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை உண்மையை உரைக்கும் படமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

வசந்தபாலன் அவர்கள் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அரவான், வெயில், ஆல்பம் அங்காடித்தெரு, காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் அங்காடி தெருவில் படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் சொல்லித் தந்துள்ளார். அதுவும் எந்த பாடலுக்கு தெரியுமா மக்கள் மத்தியில் இன்றளவும்  பிரபலமாகி உள்ள ‘உன் பெயரை சொல்லும்’ பொழுது என்ற பாடலுக்கு நடனம் இருந்தார்.

அதுவும் அவர் இப்படி சொல்லி தந்துள்ளார் என தெரியுமா புதுமுக நடிகரான மகேஷ்க்கு சரியாக நடனம் வராததால் அவரை வசந்தபாலன் அவர்கள் அடி அடி என அடித்து உள்ளார். அதன் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

Leave a Comment