என்ன சொல்லிறிங்க.. செந்தில், கவுண்டமணி இடையே சண்டையா.. பேசிக்க மாட்டங்களா.? உண்மை உடைக்கும் பிரபலத்தின் மகன்.

0

தொன்னூறு காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இருவருமே காமெடி என்ற ரோலை தாண்டி முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களின் மனதை சம்பாதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களது காமெடி எந்த திரைபடத்தில் இருக்கிறதோ அந்த திரைப்படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் அப்படித்தான் இதுவரையிலும் இருந்து வந்துள்ளன. ஒரு கட்டத்தில் இருவரும் சினிமா நடிப்பதை குறைத்து கொண்டதோடு மட்டுமில்லாமல் இருவரும் பிரிந்து விட்டனர் ஆனால் சினிமாவை மட்டும் விட்டுவிடாமல் அவ்வபோது தலைகாட்டி சினிமாவில் நடித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கவுண்டமணி ஹீரோவாக கால் தடம் பதித்து ஓரிரு திரைப்படங்களில் அசத்தியுள்ளார். நடிகர் செந்தில் விளம்பர படங்கள் மற்றும் பல முன்னணி நடிகரின் படங்களில் காமெடியனாகவும் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் ஆனால் கவுண்டமணி மற்றும் செந்தில் சேர்ந்து நடித்தால் பார்ப்பதற்கு இன்னும் அருமையாக இருக்கும் என ரசிகர்களும், மக்களும் சொல்லி வருகின்றனர்.

அது நடக்குமோ நடக்காதோ என்ற கேள்வி மட்டும் தற்போது வரையிலும் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் செந்திலின் மூத்த மகன் மணிகண்டன் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார் அண்மையில் அவர் பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் எனது அப்பா, கவுண்டமணி ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டனர்.

இருவரும் பேசிக் கொள்ளவில்லை என சமூக வலைத்தளத்தில் நிறைய செய்தி வருகிறது அது உண்மை இல்லை அவர்களின் அண்ணன் தம்பி உறவு இப்பொழுதும் நீடிக்கிறது அவர்களது காம்போ எல்லோரையும் போல் நானும் மிஸ் செய்கிறேன் என அவர் குறிப்பிட்டு பேசி உள்ளார்.