என்ன சொல்ல போகிறாய், நாய் சேகர் – “பொங்கல் ரேசில்” எந்த படம் ஜெயிச்சது.? வெளிவந்த தகவல்.?

முக்கிய நாட்களில் எப்பொழுதும் டாப் நடிகர்கள் படங்கள் வெளிவந்து அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாட வைப்பார்கள். ஆனால் தற்பொழுது நிலவும் சூழலில் சரியில்லாததால் அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் போனதே இருப்பினும் புதுமுக நடிகரின் படங்கள் வெளிவந்து பொங்கலை சிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்  அஸ்வின். ஒரு கட்டத்தில் இவர்கள் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது ஆம் பல்வேறு கதைகளை கேட்டு அதில் 40 கதைகளில் தூங்கியதாகவும் 41 – வது கதையான என்ன சொல்ல போகிறாய் படத்தின் கதையை கேட்டு மெய் சிலிர்த்துப் போய் விட்டாராம்.

அதனால் அந்த கதை பிடித்துப் போகவே பின் படத்தில் நடித்து ஒரு வழியாக முடித்தார். படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஆடியோ விழாவில் பேசத் தெரியாமல் பேசி தன்னை ஒத்த நல்ல பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார் அதன் பின் ஒரு வழியாக இவரது திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது.

படம் சிறப்பாக இருந்தால் அஸ்வினை கொண்டாடி இருப்பார்கள் ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தவறிவிட்டது மேலும் மிக மோசமான வசூலைப் பெற்று வருகிறது இதற்கு நாய் சேகர் படம் பரவாயில்லை விமர்சனம் ஓரளவு பரவாயில்லை.

இந்த வசூலை அள்ள வில்லை என்றாலும் சுமாரான வசூலை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறதாம். பொங்கலை முன்னிட்டு வெளியான படங்களில் பெருமளவு வசூல் பெறாதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது மேலும் மக்கள் கூட்டமும் பெரிய அளவில் திரையரங்கிற்கு போகவில்லையாம்.

Leave a Comment