ஈரமான ரோஜாவே , பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சாய் காயத்ரியின் அம்மாவை நீங்கள் பார்த்து உள்ளீர்களா.? கோவில் முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

0

விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்தொடர். இவை குடும்ப ஒற்றுமை, அண்ணன் தம்பி பாசம் போன்றவற்றை மையமாக கொண்டு எடுத்து வருவதால் மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு இன்றும் விஜய் டிவியில் நம்பர்-ஒன் சீரியல் என்ற இடத்தில் இருந்து வருகின்றன.

தற்பொழுது அந்த சீரியலில் கடைக்குட்டி கண்ணன் வீட்டுக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு வெளியில் வீடு எடுத்து தங்கி இருக்கின்றார். மகன் தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து இலட்சுமி அம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பின்பு சில தினங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.

இந்த நேரத்தில் கண்ணனுக்கு ஜோடியான ஐஸ்வர்யா கேரக்டரில் இருந்த விஜே தீபிகா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். இவர் பல சேனல்களில் தொகுப்பாளியாகவும் பணியாற்றியுள்ளார்மற்றும் ஈரமான ரோஜாவே சீரியலில் துணை கதாநாயகியாக நடித்து வந்தவர் அந்த சீரியல் முற்றிலும் நிறைவடைந்தன.

பிறகு எதில் கமிட் ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து ஐஸ்வர்யா ரோல்க்கு நடிக்க வந்தார். கண்ணனுக்கு ஜோடியாக இவர் நடிப்பு குறித்து சமூக வலைதளங்களில் சில நெகட்டிவ் கமெண்ட்களும் வந்தவண்ணம் உள்ளன.

இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நடிகை சாய் காயத்ரி தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

kayathiri and amma
kayathiri and amma