இந்தியாவை பந்தாட வெஸ்ட் இண்டீஸ் போட்ட மாஸ்டர் பிளான்.! இந்த இரண்டு வீரர்கள் மீண்டும் வருகிறார்களா

0
India vs West Indies t20
India vs West Indies t20

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோத இருக்கும் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் தனது அணி வீரர்களை அறிவித்துள்ளது.

இந்திய அணி வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது. இதில் 3 ஒருநாள் போட்டி இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது, இதற்கான இந்திய வீரர்களை பிசிசிஐ நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்திய அணியில் ரிஷப் பான்ட் மற்றும் தீபக் சஹார் ஆகிய இளம் வீரர்களுக்கு இந்த முறை வாய்ப்பு அளித்துள்ளார்கள் இந்த நிலையில் இந்தியா உடன் முதல் டி20 போட்டியில் மோதவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களை அறிவித்துள்ளது.

இந்த 14 பேர் கொண்ட வீரர்களில் சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் இருந்த அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்ட்  மற்றும் சுனில் நரேன் அணியில் சேர்த்துள்ளார்கள், இதற்கு காரணம் தேர்வு குழு இடைக்கால தலைவர் அடுத்தாண்டு நடைபெற இருக்கிற டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு பொல்லார்ட் மற்றும் நரேனையும் அணியில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பிராத்வெயிட் , ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்டு, ரோவ்மன் பாவெல், கீமா பால், சுனில் நரேன், காட்ரல், ஓஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஆண்ட்ரே ரசல், காரி பியர்ஸ் ஆகியோர்கள் அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.