தென்னாப்பிரிக்காவுக்காண இந்திய அணி அறிவிப்பு.!! அப்போ ரோஹித் ஷர்மா.?

0
test cricket
test cricket

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியை பி.சி.சி.ஐ தற்போது அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இறந்த நிலையில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வியை அனைவரிடமும் இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் செயல்பாடுகளை கருத்தில்கொண்டு யார் யாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போகும் என்ற பேச்சும் இருந்தது இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரஹானே, மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா மற்றும் ஷூப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கே.எல் ராகுலுக்கு பதிலாக ஷூப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் உமேஷ் யதாவிற்கு பதிலாக குல்தீபிற்கு அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேலும், ரோஹித் சர்மா தான் துவக்க வீரராக களம் இறங்குவார் என தேர்வுக் குழு தலைவர் கூறினார். அதனால், ரோஹித் சர்மா ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஆடிய மற்ற வீரர்கள், அப்படியே இடம் பெற்றுள்ளனர்.