மீண்டும் விஷால் படத்திற்கு ஆப்பு .! நீதிமன்றம் அதிரடி…

இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தில்  விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் ரோபோ சங்கர் மற்றும் ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் சக்ரா  படம் தீபாவளிக்கு வெப் தொடரில்  வெளியாகும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நடிகர் விஷால் பேட்டியில் கூறியிருந்தார்.

சக்ரா திரைப்படத்தின் ஒரு காட்சி மட்டும் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

chakra
chakra

மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆனந்தன் கூறிய அதே கதையை தற்போது நடிகர் விஷால் தனது நிறுவனத்திற்கு சக்ரா என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் சக்ரா படத்தை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்றம் தரை உத்தரவு ஒன்றை நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment