ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்.! வாழ்த்துக் கூறும் ரசிகர்கள்.

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஆதி.  இவர் நடிப்பில் மிருதன், ஈரம், ஐயனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு தமிழினை தொடர்ந்து தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக கிளாக் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹர ஹர மகாதேவி, கலகலப்பு 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

மேலும் நடிகர் ஆதியுடன் இணைந்து மரகத நாணயம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு இருவருமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்தனர். இவ்வாறு இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது ஆனால் இதனைப் பற்றி எதுவும் கூறாமல் மிகவும் கவனமாக இருந்து.

aathi nikki
aathi nikki

அதன் பிறகு சில நாட்கள் கழித்து தான் இவர்கள் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த புகைப்படம் இணையதளத்தில் வெளிவந்தது. கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று   இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இன்று திருமணம் முடிந்துள்ளது.

nikki aathi 1
nikki aathi 1

இவ்வாறு இன்று நடந்த இவருடைய திருமணத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Comment