Asia cup super 4 india – pakistan match : இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் 4 போட்டிக்கு தகுதி ஆகியுள்ளது. இந்திய அணி வருகின்ற 10 ஆம் தேதி அதாவது நாளை பாகிஸ்தான் அணியை எதிர்த்து மோத இருக்கிறது.
ஏற்கனவே நடந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது ஆனால் அந்த போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து நாளை நடைபெற போட்டியை காண ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபநாசம் எங்களுக்கு தான்..
100 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை தோற்கடித்ததால் கிடைத்த மிகப்பெரிய தன்னம்பிக்கையை பயன்படுத்தி இந்த முறை 100% சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவை தோற்கடிப்போம் என்று கேப்டன் பாபநாசம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார் தற்பொழுது அவர் கூறியது..
இலங்கையில் நடந்த இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் தங்களுடைய பெரும்பாலான வீரர்கள் விளையாண்டு உள்ளனர் அதுபோக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இலங்கை மண்ணில் ஆப்கானிஸ்தானை அணியை எதிர்கொண்டு 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றது உலகின் நம்பர் ஒன் அணியாக பாகிஸ்தான் முன்னேறி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதாவது இந்தியாவை விட இலங்கை மண்ணில் சமீபகாலமாக அதிகமாக விளையாடி அங்குள்ள கால சூழ்நிலை நன்கு தெரிந்து வைத்துள்ளதால் இந்த சூப்பர் 4 போட்டியில் தங்களுக்கே அதிக சாதகம் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..