நாம் அனைவரும் சேர்ந்து ஒரு கோடி மரக்கன்றை நடுவோம்.. கேட்டுக்கொண்ட நடிகை ஆத்மிகா.! விவேக் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

0

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையான ஆத்மிகா தமிழ் சினிமாவில் பல்வேறு சிறப்பு கூறிய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தற்போதைய காலகட்டத்திற்கு அவரால் சொல்லிக்கொள்ளும்படி படங்களை கைப்பற்றவில்லை.

இருப்பினும் இவருக்கு ஓரிரு திரைப்படங்கள் வாய்ப்புகள் கிடைத்துள்ளன அந்தவகையில் உதயநிதி ஸ்டாலினுடன் முதல் முறையாக ஜோடி அமைத்து கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார் மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் இந்த இரண்டு படங்களை தவிர வேறு எந்த திரைப்படமும் கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் இருக்கும் அம்மணி. தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது மறைத்த நடிகர் விவேக்கின் ஆசையை நிறைவேற்ற ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

அந்த வகையில்  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நடிகை ஆத்மீகா தனது தோட்டத்தில் மரக்கன்றை நட்டு காமெடி நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இவரைப் போன்று பல்வேறு நடிகர், நடிகைகளும் தொடர்ந்து மர கன்றை நட்டு வருகின்றனர்.

இதைப் பார்த்து அவரது ரசிகர்களும் தற்போது மரக்கன்றை வீதி ஓரங்களிலும் தனது வீட்டிலும் வைத்து வளர்க்கின்றனர்இப்படியே போனால் விரைவிலேயே ஒரு கோடி மரக்கன்று நட்டு அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற முடியும் என பலரும் கூறி வருகின்றனர்.