8 திரைகளிலும் ஜெயிலரை திரையிட்டோம்.. முதல் நாளே ரஜினிக்கு மெசேஜ் பண்ணி மெகா ஹிட் ன்னு சொன்னேன் – சினிமா பிரபலம் பேச்சு

Rajini Jailer movie
Rajini Jailer movie

Rajini Jailer movie : தோல்வியிலிருந்து வருபவர்கள் எப்பொழுதுமே நல்ல ஒரு கம்பேக் கொடுப்பார்கள் அந்த வகையில் ரஜினி கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றன். உடனே நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்தார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்து இழுத்து சக்கபோடு போட்டு வருகிறது. இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் எதிர்பார்க்காத அளவிற்கு அள்ளி வருகிறது 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை மட்டுமே சுமார் 605 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஜெயிலர் படத்தின் வசூல் குறையாது என பலரும் கூறி வருகின்றனர். இதனால் ரஜினியும் சரி, தயாரிப்பு நிறுவனம் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. ஏற்கனவே தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினி, இயக்குனர் நெல்சன்,  அனிருத்..

ஆகியோர்களுக்கு செக் மற்றும் ஒரு கோடி மதிப்பிலான சொகுசு காரர்களை பரிசாக வழங்கினார். அது இணையதள பக்கங்களில் பெரிய அளவில் வைரலானது என்பதை குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து பிரபலம் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

அவர் சொன்னது என்னவென்றால்.. 8 திரையிலும் நாங்கள் ஜெயிலரை திரையிட்டோம். முதல் காட்சி முடிந்ததுமே எங்களுக்கு தெரிந்து விட்டது ஜெயிலர் ஹிட்டல்ல மெகா ஹிட் ஆகப்போகிறது என்று உடனே நான் நேரம் தாமதிக்காமல் உடனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  ஒரு மெசேஜ் அனுப்பினேன் ஜெயிலர்

ஹிட் கிடையாது மெகா ஹிட் ஆகப்போகிறது என அனுப்பினேன் என்று அவர் அழுத்தம் திருத்தமாக சொல்லி உள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.