யோகி பாபுவை டப்பிங் தியேட்டரில் வைத்து அடி அடின்னு அடித்து உதைத்தோம்.? பேட்டியிலேயே திமிராக பேசிய தயாரிப்பாளர்…

யோகி பாபு நடித்த தாதா திரைப்படத்தை பற்றி இயக்குனர் துரைராஜன் தற்பொழுது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகனாக வலம் வருபவர்  நடிகர் யோகி பாபு. இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார் அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக்கிய மான் கராத்தே என்ற திரைப்படத்தின் மூலம் யோகி பாபு ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு  யோகி பாபு தன்னுடைய விடாமுயற்சியால் ரசிகர்கள் மத்தியில் மெல்ல மெல்ல பிரபலமானது இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில் தற்பொழுது யோகி பாபு இல்லாத திரைப்படமே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அவர் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் யோகி பாபு முன்னணி நடிகர்களானா ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தற்பொழுதைய காலகட்டத்தில் யோகி பாபு கால்ஷீட் கிடைக்காத என பல இயக்குனர்கள் ஏங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார் இவர் சமீபத்தில் வெளியாகிய லவ் டுடே என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த அளவு யோகி பாபுவால் நடிக்க முடியுமா என பலரும் வியந்தார்கள் அந்த அளவு யோகி பாபு நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் இதற்கு முன் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்திலும் விஜயுடன் காமெடியாக நடித்திருந்தார்.

தாதா திரைப்படத்தில் ஹீரோவாக நிதின் சத்தியா நடித்துள்ளார் இந்த நிலையில் தாதா போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதனால் யோகி பாபு நடித்த தாதா படத்தின் மீது இயக்குனர் துரைராஜன் அளித்திருக்கும் புகார் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் துரைராஜ் இவர் சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தாதா திரைப்படத்தின் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் நான் நிதின் சத்யா யோகி பாபு ஆகியோர்களை வைத்து ஐந்து கோடி ரூபாய் செலவில் மணி என்ற திரைப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு எடுத்தேன் இந்த திரைப்படத்தை சென்சார் செய்து ஹார்ட் டிஸ்கில் வைத்திருந்தேன் ஆனால் கிஷோர் என்பவர் அந்த ஹார்ட் டிஸ்கை திருடி சென்று தாதா என்ற பெயரில் வெளியிட முயற்சி செய்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தாதா பாடல் வெளியீட்டு விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருக்கிறார் இதனை அடுத்த துரைராஜன் செய்தியாளர்களை சந்தித்த பொழுது துரைராஜனின் வழக்கறிஞர் யோகி பாபுவை தொடர்பு கொண்டு பேசிய அந்த ஆடியோவையும் பத்திரிகையாளர் சமர்ப்பித்துள்ளார்கள் அதில் அவர் தாதா திரைப்படத்தில் நான் ஹீரோவா கிடையாது நான் நடித்தது மணி படம்தான் தாதா திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த இயக்குனர் என்னுடைய படத்தை போட்டு ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை என்று யோகி பாபு கூறியுள்ளார்  தாதா திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் கூறியிருப்பது துரைராஜ் என்பவர் என்னுடைய படத்தில் எடிட்டராக வேலை செய்தவர் அவர் நான் எடுத்த படத்தை எடிட்டிங் செய்து வைத்து இப்படி எல்லாம் பொய் புகார் அளித்திருக்கிறார் அது மட்டும் இல்லாமல் யோகி பாபு இந்த படத்தில் நடித்திருக்கிறார் டப்பிங் பேச வராததால் எங்களுக்கும் அவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது அப்பொழுது அவரை அடித்ததால் பயந்து போய் இந்த படத்திற்கு வந்து டப்பிங் பேசி கொடுத்தார் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர் இது போல் பொய் சொல்லி இருக்கிறார் என கூறியுள்ளார்கள்.

Leave a Comment